"Rugged Girlsஆ இருப்பாங்களோ" ஜெயிலுக்குள் இருந்துகொண்டே இன்ஸ்பெக்டரை மிரட்டிய லேடி கேடி-கள்
சென்னை புழல் சிறையில் காவல் ஆய்வாளரை மிரட்டிய பெண் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பார்வதி, அலமேலு ஆகியோர், கஞ்சா கடத்தல் வழக்கில் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்ட நிலையில், கையெழுத்து பெறுவதற்காக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் சிறைக்கு சென்றுள்ளார். அப்போது காவல் ஆய்வாளரை 2 பெண் கைதிகளும் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புழல் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சரவணன் அளித்த புகாரின் பேரில், 2 பெண் கைதிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.