நாமக்கல் எருமப்பட்டி அருகே எ.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தருக்கு வேட்டாம்பாடியைச் சேர்ந்த சினேகா உடன் திருமணம் நடந்தது. சினேகா தனிக்குடித்தனம் போக வேண்டும் என கூறி வந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. தனிக்குடித்தனம் தொடர்பாக சினேகா வீட்டார் சுரேந்தர் வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்ததாக கூறப்படுகிரது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி சினேகா தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனமுடைந்த சுரேந்தர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுரேந்தர் தற்கொலைக்கான காரணத்தை வீடியோ பதிவு செய்து கோவையில் உள்ள உறவினரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பி உள்ளார். மகன் இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை செல்வராஜும் தாய் பூங்கொடியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.