நாடு விட்டு நாடு பறந்த காதல் - கஜகஸ்தான் பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர்
கஜகஸ்தான் பெண்ணை காதல் திருமணம் செய்த தமிழ்நாட்டு இளைஞருக்கு உறவினர்கள் மலர்தூவி ஆசி வழங்கினர். அரியலூர் மாவட்டம் முள்ளுக்குறிச்சியை சேர்ந்த விமான பொறியாளரான பிரபாகரன், கஜகஜஸ்தான் நாட்டில் பணியாற்றி வந்தார். அப்போது அவருடன் பணியாற்றிய அதே நாட்டை சேர்ந்த அய்டானா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. ஓராண்டாக இருவரும் தங்களது காதலை வளர்த்து வந்தநிலையில் இருவரது பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இன்று கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நடந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அவருக்கு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி உள்பட உறவினர்கள், கட்சி தொண்டர்கள் மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர்.