#JUSTIN | திடீரென மேகத்தை மூடிய கரும்புகை..கொளுந்து விட்டு எரிந்த தீ..மதுரையில் பரபரப்பு

Update: 2024-12-31 04:35 GMT

மதுரை புதூர் பகுதியில் உள்ளம் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயணைத்து வருகின்றனர்- மருத்துவமனை தற்போது செயல்பாட்டில் இல்லை

மதுரை புதூரில் உள்ள தனியார் மருத்துவமனை (பாரதி) மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகை வருகிறதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக தீயணைப்பு துறை அலுவலர் அசோக்குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து தீயணைத்து வருகின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனை செயல்பாட்டில் இல்லாத நிலையில் மருத்துவமனை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் செயல்பாடு இன்றி கிடந்த மருத்துவமனை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இந்த கட்டிடத்தில் செவிலியர்கள் மட்டும் 50 பேர் தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும், அதில் ஏசி மில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்