கடலூரில், தமிழக வாழ்வுரிமை கட்சி பிரதிநிதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சான்றோர் பாளையத்தை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி பிரதிநிதி சங்கர் என்பவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார், முன்விரோதத்தால் கொலை நடைபெற்றதாக தெரிவித்தனர். இதில் தொடர்புடைய சதீஷ் மற்றும் அன்பு ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில், சதீஷின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது. இதனிடையே, குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற மாட்டோம் என கூறி முதுநகர் காவல்நிலையத்தை சங்கரின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். தொடர் பேச்சுவார்த்தைக்கு பின் போலீசார் உறுதியளித்ததை ஏற்று, சங்கரின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.