தோள்பட்டைமூட்டு மாற்று அறுவை சிகிச்சை.. அரசு மருத்துவர்கள் நிகழ்த்திய சாதனை
விருதுநகர் சிவரக்கோட்டையை சேர்ந்த கரந்தமலை 6 மாதங்களுக்கு முன்பாக கட்டிட வேலை செய்தபோது கீழே விழுந்ததால் தோள்பட்டையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. நாட்டு வைத்தியம் பார்த்து சரியாகாததால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றவருக்கு, தோள்பட்டை சீல் இருந்தது அகற்றப்பட்டு, எழும்பின் தலைப்பகுதி சேதம் அடைந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சொந்த ஊரில் அரசு மருத்துவ முகாமில் அளிக்கப்பட்ட பரிந்துரைபடி தேனி மருத்துவமனை சென்றவருக்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செயற்கை மூட்டு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோடாங்கிபட்டியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவருக்கும் வலது கை மூட்டுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் செலவாகவும் சிகிச்சை அரசு மருத்துவமனையில் இலவசமாக அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் முதல் முறையாக நடைபெற்ற இரு அறுவை சிகிச்சையிலும் நோயாளிகள் நலமோடு இருப்பதாகவும், முன்பு போல் கைகளை அசைக்க முடிகிறது என தெரிவிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.