தகாத உறவு - தனியார் விடுதியில் பெண் தற்கொலை

Update: 2024-12-07 13:07 GMT

மதுரை மாவட்டம் மேல் கள்ளந்திரியை சேர்ந்த பாலுச்சாமி - மகா லெட்சுமி தம்பதிக்கு திருமணம் முடிந்து 5 வருடங்களாக குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், மகாலெட்சுமிக்கும் அதே தெருவில் வசித்து வரும் சசிக்குமாருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் கொடைக்கானல் சென்றுள்ளனர். அங்கு தனியறையில் இருவரும் தங்கியுள்ளனர். இந்த நிலையில் அறையில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. கதவை தட்டியும் திறக்காததால் ஊழியர்கள் போலீசாருக்கு

தகவல் கொடுத்தனர். போலீஸ் வந்து பார்த்த போது மகாலட்சுமி உணவில் குருணை மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதும், அவருடன் வந்த சசிக்குமார் தனது இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதனிடையே, மகாலெட்சுமி, தனது தம்பியிடம் தனக்கு வாழபிடிக்க வில்லை என்றும், உயிரை மாய்த்துக் கொள்வதாகவும் செல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அது குறித்து அவரது தம்பி, மதுரையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவற்றை வைத்து தப்பியோடிய கள்ளக்காதலன் சசிக்குமாரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்