#BREAKING || குடியரசு தின அணிவகுப்பு..தமிழ்நாட்டிற்கு அதிர்ச்சி செய்தி | India | Republic Day

Update: 2024-12-22 16:21 GMT

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் பங்கு பெறும் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்.

நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா அடுத்த மாதம் 26 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்வின் போது டெல்லி ராஜபாதையில் நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்வில் பல்வேறு துறைகள் மற்றும் மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம்.

இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த அலங்கார ஊர்தி இடம் பெற உள்ளது.

யூனியன் பிரதேசங்களில் பீகார், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், ஆந்திரப் பிரதேசம், குஜராத், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அலங்கார ஊர்திகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுக்கான அணிவகுப்பு நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார ஊர்திகள் தேர்வு வெளிப்படையான செயல்முறையின் அடிப்படையில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் சில மாநிலங்கள் தங்கள் ஊர்திகள் மத்திய அரசு நிராகரித்ததற்கு ஏமாற்றம் தெரிவித்தன.

இந்த அலங்கார ஊர்திகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியின் அலங்கார உறுதி நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் டெல்லியின் அலங்கார ஊர்தி இடம் பெற அனுமதி வழங்கப்படவில்லை

Tags:    

மேலும் செய்திகள்