யார் அந்த சார்? - கிராம மக்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

Update: 2025-03-20 11:58 GMT

சிவகங்கையை அடுத்துள்ள வேம்பங்குடி மற்றும் மாடக்கோட்டை கிராமங்களில் சிலர் கிராவல் மண் குவாரி அமைத்து நிர்ணயம் செய்யப்பட்ட அளவை தாண்டி மணல் கொள்ளை நடப்பதாக கிராம மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என்றும் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கும் சார் யார்? என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்