செல்ஃபி மோகம்...தண்டவாளத்தில் விளையாட்டு...ரயில் மோதி 2 சிறுவர்கள் பலி
சேலம் ஆத்தூர் அருகே செல்ஃபி எடுத்து தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 பள்ளி மாணவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
புத்திர கவுண்டன்பாளையம், ஆதிதிராவிடர் பகுதியில் வசித்து வந்த தினேஷ் மற்றும் அரவிந்த் ஆகிய இரு 11ம் வகுப்பு ரசுப்பள்ளி மாணவர்களும் ஞாயிறு விடுமுறை என்பதால் வெளியில் விளையாட சென்றுள்ளனர்...
புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து பேசி கொண்டு செல்ஃபி எடுத்து விளையாடியுள்ளனர்... அப்போது இருவருமே ரயில் வருவதை கவனிக்காத நிலையில், சேலத்திலிருந்து விருதாச்சலம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்... இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்... கவனக்குறைவாலும் செல்ஃபி மோகத்தாலும் பள்ளி மாணவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.