நெல்லை கோர்ட் வாசல் கொலை - சரத்குமார் பரபரப்பு அறிக்கை

Update: 2024-12-21 07:48 GMT

நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்கவும், இது போன்ற இனி சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும் இந்த வழக்கை காவல்துறையும் நீதிமன்றமும் முழுமையாக விசாரணை செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நீடித்தால் பொதுமக்கள், தங்கள் கையில் தற்காப்பு உபகரணம் வைத்துக்கொள்ளும் எண்ணம் உருவாகும் என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்