பெரியப்பாவை சரமாரியாக வெட்டிக் கொன்ற மகன்..! சேலத்தில் அதிர்ச்சி சம்பவம் | Salem
ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 6வது வார்டு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் தம்பி மகனான பிஎஸ்சி பட்டதாரி செல்வராஜ், கடந்த மூன்று ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுப்பழக்கம் உள்ள செல்வராஜ் தனது பெரியப்பா பெரியசாமியிடம் மது அருந்துவதற்கு காசு கேட்டதாக கூறப்படுகிறது. பெரியசாமி தர மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென வீட்டிலிருந்த கத்தியால் பெரியப்பாவை செல்வராஜ் வெட்டி கொலை செய்துள்ளார்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.