11ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு மகளிர் கோர்ட் கொடுத்த தண்டனை
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞர், கடந்த 2021-ல் ஈரோட்டைச் சேர்ந்த 11-ம் வகுப்பு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகாரளித்த நிலையில், ஹரிஷை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி இளைஞர் ஹரிஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.