தொட்டதும் பஞ்சு மாறி வருதே - அதிர்ச்சியில் மக்கள்

Update: 2024-12-23 04:52 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை கையால் தொட்டாலே பெயர்ந்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாரந்தை அருகே குறுக்கே செல்லும் கண்மாய் கால்வாய் மீது தரைப்பாலம் உள்ளது. இப்பாலம் சேதமடைந்த நிலையில், சமீபத்தில் புதிய பாலம் கட்டப்பபட்டு, அதில் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மாதத்தில் ஆங்காங்கே பிளவு ஏற்பட்டு சாலை சேதமாகியுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள மக்கள், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சாலையை சீரமைக்க வேண்டும், தரமற்ற முறையில் சாலை அமைத்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்