"உனக்கு எப்படி புள்ள பொறக்கும்னு கேட்டான்"..அவமானம் தாங்காமல் கதறிய நபர்..இதயத்தை நொறுக்கும் காட்சி

Update: 2024-12-23 09:12 GMT

மாற்றுத்திறனாளி சரவணன் கடந்த சனிக்கிழமை பொழிச்சலூரில் உள்ள அகத்தீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

அதன் பிறகு கோயிலில் உள்ள பூசாரி அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு இருந்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா தயாளன் மகன் தினேஷ் பாபு, சாதியை சொல்லியும் தகாத வார்த்தைகளாலும் திட்டி எதற்காக கோவிலுக்கு வருகிறாய் எனக் கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி சரவணனை தாக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தினேஷ் பாபுவிற்கு நெற்றியில் காயம் ஏற்பட்டதாகவும்,

சரவணன் அங்கிருந்து புறப்பட்ட போது கோவில் வளாகத்தில் வைத்து திட்டி நெஞ்சில் எட்டி உதைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... இதில் மாற்றுத்திறனாளி சரவணன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பான அதிர்ச்சிகர சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. கஷ்டப்பட்டு எழுந்து தனது வாக்கிங் ஸ்டிக்கை சரவணன் எடுக்க முயன்றபோது சரவணன் மீண்டும் தாக்கியுள்ளார். காயமடைந்த சரவணன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது அங்கு வனஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவரை வழிமறித்து மிரட்டி விரட்டினராம்... சரவணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த தினேஷ் பாபு மருத்துவமனையில் இருந்து திடீரென பாதியிலேயே மாயமாகியுள்ளார்... தினேஷ் பாபு மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்