மாணவிகளை வைத்தே ஹாஸ்டலில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்திய மூதாட்டி - வெளியான அதிர்ச்சி வீடியோ
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள சீர்மரபினர் மாணவிகள் விடுதியில் இருந்து, இரண்டு அரிசி மூட்டைகள்ஆட்டோவில் கடத்தப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
பள்ளி மாணவிகளை சாக்கு முட்டையை தூக்க வைத்து, அரிசியை கடத்திச் செல்லும் சமையலர் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த விடுதிக்காப்பாளர் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.