தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் உடன் வந்த மூதாட்டி - பார்த்ததுமே அதிர்ந்து போன போலீசார்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, தண்ணீர் கலந்த மண்ணெண்ணெய் உடன் வந்த மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கள்ளிப்பட்டிவரப்பாளையம் பகுதியை சேர்ந்த 80 வயதான மூதாட்டி சின்னம்மா, தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை ஏமாற்றிய உறவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறை கேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் கேனில், பாதி அளவு தண்ணீர் இருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.