மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்... கருகி கிடந்த இரு உடல்கள் | Ranippet | TN Police | Thanthi TV
குடும்பத் தகராறில், மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவரும் பலத்த தீக்காயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த பாலாஜி - சித்ரா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, சித்ரா 2 பெண் குழந்தைகளுடன், ராணிப்பேட்டை மாவட்டம், அய்யம்பேட்டை கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் சில ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி சித்ரா, தமது தாயார் வீட்டில் முறுக்கு சுட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கணவர் பாலாஜி, சித்ரா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சித்ரா, அருகே இருந்த பாலாஜியை கட்டிப்பிடித்துள்ளார். இந்த சம்பவத்தில், பாலாஜியும் பலத்த தீக்காயமடைந்தார். 90 சதவீத தீக்காயமடைந்த சித்ரா ஏற்கனவே உயிரிழந்தார். 60 சதவீத காயங்களுடன் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலாஜியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.