தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட முக்கிய கட்சி பிரமுகர்...தோட்டத்து வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி

Update: 2025-01-10 14:57 GMT

சில நாட்களுக்கு முன்னாதாக, டிடிஎஃப் வாசன் வீட்டில் பாம்பு வளர்த்த வீடியோ வைரலாகி சர்ச்சையானது.

இதை தொடர்ந்து, அவர் கூண்டு வாங்கிய கடையை கூண்டோடு காலி செய்தது வனத்துறை. அதோடு டி.டிஎஃப்பின் பாம்பு குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வாசனின் ஃபாரின் பப்பிக்கு போட்டியாக , ராமநாதபுரத்தில் ஒருவர் நாட்டு நல்ல பாம்பை பெட்டாக வளர்த்து கொத்தாக கைதாகி இருக்கிறார்.

கோழி கூண்டுக்குள் இரண்டு சீறும் பாம்புகைளை, பால் முட்டை கொடுத்து பராமரித்து வந்தவரின் பின்னணியை தேடினோம்...

ராமநாதபுரம் மாவட்டம் பள்ளப்பசேரி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். திமுக வின் ஆன்மீக அணியின் நிர்வாகியாக இருந்துவரும் இவர், காஞ்சனா உட்பட சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன், திமுக ஆளுநர் சர்ச்சை எழுந்த போது, ஆளுநர் ஆர் என் ரவிக்கு கண்டனங்களை தெரிவித்து திமுக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது,

அப்போது , ராஜேந்திரன் உடுக்கை அடித்து குறி சொல்வது போல ஆளுநருக்கு கண்டனங்களை பதிவு செய்திருந்தார்.

அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தி சேகரிப்பதற்காக செய்தியாளர்கள் ராஜேந்திரனின் தோட்டத்து வீட்டுக்கு சென்ற போது, அங்கிருந்த ஒரு கோழி கூண்டுக்கு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

கோழியை பிடிக்க, வந்த பாம்பு கூண்டுக்குள் மாட்டிக் கொண்டதோ என்று தான் முதலில் நினைத்திருக்கிறார்கள்.

ஆனால் ராஜேந்திரனோ இது, எனது செல்ல பிள்ளை சின்னவன் என அறிமுகம் செய்திருக்கிறார். 'என்னது இவன் சின்னவனா'

என அதிர்ந்து போனவர்கள் , பக்கத்து கூன்டில் படமெடுத்தபடி இருந்த இன்னொரு பாம்பை பார்த்து

பதறி போயிருக்கிறார்கள்.

இது குறித்து ராஜேந்திரனிடம் விசாரித்திருகிறார்கள். அப்போது தான் ராஜேந்திரன் ஒரு பாம்பு பிரியர் என்று தெரிய வந்திருக்கிறது.

ராஜேந்திரனுக்கு பாம்புகள் என்றால் அலாதி பிரியம் , இதனால் தனது உடலில் பாம்பு வடிவத்தை பச்சை குத்தி இருக்கிறார். பாம்பை பார்த்தால் துளியும் பயப்படாத ராஜேந்திரன் , படையப்பா போல கையாலயே பிடித்துவிடுவார்.

அப்படித்தான் சில நாட்களுக்கு முன் அவர் பிடித்த பாம்பை, அவருக்கு மிகவும் பிடித்துவிட்டாதால், அதை கூன்டுக்குள் வைத்து கொஞ்சி குலாவி வளர்த்திருக்கிறார்.

அதே போல மீண்டும் ஒரு பாம்பை பிடித்து வந்து, இரண்டையும் ஜோடியாக பராமரித்து வந்திருக்கிறார்.

தினமும் பாம்புகளுக்கு தேவையான உணவை கொடுத்து போஷாக்காக வளர்த்து வந்திருக்கிறார்.

அவரது தோட்டத்து வீட்டில் இந்த பாம்பு வளர்ப்பு நடந்து வந்ததால் வெளி உலகிற்கு இது பற்றி தெரியவில்லை.

கூன்டுக்குள் அடைக்கப்பட்ட பாம்புகள் , எப்போதும் ஆக்ரோஷமாக சீறிய வண்ணமே இருந்திருக்கிறது.

இதை படம் பிடித்த செய்தியாளர்கள், ஊடகங்களில் ஒளிபரப்பிய நிலையில், அண்ணாரின் உடுக்கை அடி வீடியோவை ஓவர் டேக் செய்திருக்கிறது, இந்த பாம்பு வளர்ப்பு செய்தி.

இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள், ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்று இரண்டு பாம்புகளையும் கைபற்றியதோடு, அவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

மீட்க்கப்பட்ட பாம்புகளை பத்திரமாக காட்டுப்பகுதியில் விடுவித்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்