"இதுபோன்ற மாணவர்களுக்கு" - தொடக்க பள்ளியில் எம்.பி., ஆட்சியர் திடீர் ஆய்வு | Pudukottai | Thanthi TV

Update: 2024-11-15 15:36 GMT

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா ஆகியோர் திடீர் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் தங்களது பாடங்களை வாசித்து காட்டினர்.அவர்களை ஆட்சியர் அருணா. சாக்லேட் கொடுத்து ஊக்குவித்தார். ஒரு மாணவனுக்கு வாசிப்பதில் சிரமம் இருந்தது. அந்த மாணவனையும் ஊக்குவித்து ஆட்சியர் அருணா, வாசிக்க வைத்தார். மேலும், இதுபோன்ற மாணவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கவேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்