அமைச்சர் பொன்முடி காலில் விழுந்த பெண் ஊழியர் - திடீர் பரபரப்பு..

Update: 2024-12-18 16:26 GMT

வண்டலூரில் அமைச்சர் பொன்முடி காலில் விழுந்து பெண் ஊழியர் கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு சென்று, பேட்டரி வாகனங்கள், புதிய 3டி திரையரங்கம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்தார். அப்போது பூங்காவில் பல ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள், பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென பெண் ஊழியர் ஒருவர் அமைச்சரின் காலில் விழுந்து, தங்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் சில ஊழியர்களின் கோரிக்கைகளை கேட்ட அமைச்சர் பொன்முடி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்