இந்த நம்பருக்கு உடனே கால் பண்ணுங்க..!

Update: 2025-01-10 03:46 GMT

பொங்கல் பண்டிகைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் புகார் அளிக்குமாறு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் ஆம்னி பேருந்தில் முன்பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில், ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், புகாருக்குள்ளான நிறுவனங்களிடம் டிக்கெட் விலையை குறைக்க அறிவுறுத்தியுள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டிக்கெட் விவரத்தை சங்க இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாகவும், கூடுதல் கட்டணம் வசூலித்தால், 90433 79664 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி சங்க இணையதளத்தில், சென்னையில் இருந்து திருச்சிக்கு 1320 முதல் 1900 ரூபாய் வரையும், மதுரைக்கு 1690 ரூபாய் முதல் 2550 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்