100 கிமீ கூட ஓடவில்லை.. கடுப்பு ஏத்திய ஓலா வாகனம் - வாடிக்கையாளர்கள் எடுத்த முடிவு
பொள்ளாச்சி, உடுமலை சாலை சின்னம்பாளையம் பகுதியில் ஓலா இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் மின்சார இருசக்கர வாகனங்களை ஏராளமான பொதுமக்கள் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி வாங்கி பயன்படுத்துகின்றனர்.இங்கு வாங்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுவதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அவற்றை விற்பனை நிறுவனத்திற்கு கொண்டு சென்று பழுது பார்த்தாலும் தொடர்ந்து பிரச்சனைகள் நீடித்து வருகின்றது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஓலா விற்பனை நிறுவனத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.