சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே குறி சொல்லும் கோடாங்கியாக இருந்த நபரை அரிவாளால் வெட்டி கொன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மடப்புரத்தில் வசித்து வந்த கோடாங்கியான சந்தானத்திற்கும், அருகே வசித்து வந்த தினேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ் தனது நண்பர் அஜித்குமார் உடன் சேர்ந்து சந்தானத்தை அரிவாளால் வெட்டியுள்ளார்.