100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு? வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் மக்கள் முற்றுகை

Update: 2025-03-22 01:49 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொண்ட சமுத்திரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தங்களுக்கு ஆறுமாதமாக கூலி வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கூலி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, பெண்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்