விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நீதிமன்ற உத்தரவை மீறி நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி இருந்த சிஷ்யைகளை வெளியேற்றி ஆசிரமத்திற்கு போலீசார் சீல் வைத்தனர். சேத்தூர் பகுதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தின் நிலம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அங்கு அத்துமீறி தங்கி இருந்த சிஷ்யைகளை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் வெளியேற்றினர். சிஷ்யைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.