நீலகிரி முதுமலை காட்டில் பதிவான காட்சி... தாய் - குட்டியின் சிலிர்க்க வைக்கும் வீடியோ
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், தாய் மற்றும் குட்டி புலிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. வனத்துறை சார்பாக வாகன சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு புலியை காண்பது எளிதானது அல்ல என கூறப்படுவதுண்டு. இந்நிலையில் வழக்கம்போல வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகள் சென்றபோது, சாலையோரத்தில் அழகான குட்டிப்புலி, தனது தாய்ப்புலியுடன் போஸ் கொடுத்தது. மேலும் குட்டிப்புலியுடன் சேர்ந்து தாய்ப்புலியும் விளையாடிய காட்சி, சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்தன.