இதனிடைய குன்னூர் ராணுவ பகுதிக்கு பொருட்கள் வாங்குவதற்கு குர்காஹில் பகுதியை சேர்ந்த ஜாகீர் என்பவர் தனது காரில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரம் ஒன்று காரின் மீது விழுந்தது. இதனை தொடர்ந்து காரில் இருந்த ஜாகீர் கழுத்துப் பகுதி நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வெலிங்டன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் காரில் இருந்து ஜாகிரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.