யாருமே செய்யாத விஷயம்.. யாராச்சும் இத கவனிச்சீங்களா - மயில்சாமி அண்ணாதுரை சொன்ன முக்கிய தகவல்
9 மாதங்கள் விண்வெளியில் தங்கி,, செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்கள் போக முடியும் என சுனிதா வில்லியம்ஸ் நிரூபித்து இருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். கோவை மாவட்டம் நல்லட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவில் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், நிலவுக்கு மட்டுமல்ல செவ்வாய்க்கும் மனிதர்கள் செல்ல முடியும் என்பதை சுனிதா வில்லியம்ஸ் உணர்த்தி இருப்பதாகக் கூறினார்.