டூவீலர் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்து.. பறிபோன உயிர்கள்.. அதிர்ச்சி காட்சி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மணவாளன்கரையில் டூவீலர் மீது கார் நேருக்கு நேர் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருசக்கரவானத்தில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த
காவல்துறையினர்,தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் திருமயத்தை சேர்ந்த கென்னடிநாதன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த சின்னத்துரை ஆகிய இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.