``மாத்தி மாத்தி பேசுற மா.. எவ்ளோ நாள் VAOவா இருக்க?'' - அதிகாரிகளை ஒரு நிமிடம் அலறவிட்ட ஆட்சியர் உமா
நாமக்கல் மாவட்டம் அத்தனூரில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மயான மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் ஆய்வு செய்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலரிடம் இந்த இடம் பேருராட்சிக்குட்பட்டு உள்ளதா என கேட்டார். அப்போது ஆமாம், இல்லை என VAO மாற்றி மாற்றி கூறியதை கேட்டதும் சரியாக சொல்லுங்கள் ஏன் மாற்றி மாற்றி பேசுறீங்க என கண்டித்தார். மேலும், இந்த ஊரில் மட்டும் தான் மலைமேல் மயான மேடை இருக்கு, வேறு எந்த ஊர்லையும் இப்படி பார்த்தது இல்லை என்றும் கூறினார்.