கர்ப்பப்பையில் இல்லாமல் இடம் மாறிய கரு.. சாக போகிறோம் என தெரியாமல் இருந்த தாய்.. கர்ப்பிணிகளே உஷார்

கர்ப்பப்பையில் இல்லாமல் இடம் மாறிய கரு.. சாக போகிறோம் என தெரியாமல் இருந்த தாய்.. கர்ப்பிணிகளே உஷார்

Update: 2024-11-09 02:57 GMT

மகப்பேறு மரணத்தில் இருந்து ஜார்க்கண்டைச் சேர்ந்த பெண்ணை மருத்துவர்களும் கன்னியாகுமரி ஆட்சியரும் காப்பாற்றி உள்ளனர்.

சேர்ந்த மஞ்சு என்ற பெண், நாகர்கோவில் அருகே மீன் வலை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். பரிசோதனையில் அந்தப் பெண் கர்ப்பப்பையில் அல்லாமல் கருக்குழாயில் கர்ப்பம் தரித்து இருந்ததும், கரு உடைந்ததால் ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்தப் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அந்தப் பெண்ணை ஜார்க்கண்டிற்கு அழைத்துச் செல்வதாக குடும்பத்தினர் கூறியுள்ள நிலையில் இதனை குமரி ஆட்சியர் அழகு மீனாவிடம் மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனை அடுத்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த ஆட்சியர் அழகுமீனா, அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறி புரியவைத்தார். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார்,

Tags:    

மேலும் செய்திகள்