நாகையில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போட்டோகிராபரான தந்தைக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராகேஷ் சர்மாவை விட்டு மனைவி பிரிந்து சென்ற நிலையில், தனது மகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து
உறவுக்கார பெண் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது நாகை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நாகை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.