வள்ளுவ முனைதனில் வானுயர நிற்கும் பேரறிவுச் சிலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் இளைய தலைமுறையினர் ஆர்வமுடன் பங்கெடுப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அய்யன் வள்ளுவர் வகுத்துள்ள தமிழ் வாழ்வியல் நெறியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் மகிழ்கிறேன் என்றும் வள்ளுவம் போற்றுதும் என தெரிவித்துள்ளார்.