கடலூர் மாவட்டம் அக்கடவல்லி பகுதியை சேர்ந்த சங்கர் நேற்று தனது நண்பர்கள் இருவருடன் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது சங்கர் நீரில் மூழ்கி மாயமான நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மீட்பு படையினர் மாயமான சங்கரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேடும் பணி இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், இளைஞரின் உடலை உடனடியாக கண்டுபிடித்து தர கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பண்ருட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.