``ஐயோ என் ஐபோன்''.. உண்டியலில் விழுந்த 1 லட்சம் ரூபாய் போன் - பக்தர் எழுதிய கடிதம்

Update: 2024-12-21 12:16 GMT

திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் தவறுதலாக பக்தர் ஒருவர் போட்ட ஐபோன் கோவிலுக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், உண்டியல் திறக்கும்போது செல்போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்துக் கொள்வதாக அந்த பக்தர் கோவில் நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்... திருப்போரூர் முருகன் கோயில் உண்டியலில் பக்தர் ஒருவர் கடந்த 18ம் தேதி ஐபோனைத் தவறுதலாக உள்ளே போட்டு விட்டார்... ஆனால் அந்த செல்போன் இனி கோவிலுக்கே சொந்தம் என கோவில் நிர்வாகம் தெரிவித்து விட்ட நிலையில், பக்தர் கடிதம் எழுதியுள்ளார்... அதில் அன்றைய தினம் உண்டியலில் ஐ போன் 13 ப்ரோவைத் தெரியாமல் போட்டு விட்டதாகவும், உண்டியல் திறக்கும் போது தகவல் கொடுத்தால் போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்து எடுத்துக் கொள்வதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்