வீடுகளுக்குள் புகுந்த காவிரி...மேட்டூரிலேயே வெள்ளமா? தவிக்கும் மக்கள்
மேட்டூரை அடுத்த நங்கவள்ளியில் ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் சரபங்கா திப்பம்பட்டி நீரேற்று நிலையம் மூலம் ஏரிகளுக்கு வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் தூர்வாரப்படாமல் ஆகாய தாமரைகள் படர்ந்து காணப்படும்
நங்கவள்ளியில் உள்ள ஏரி நிரம்பி அருகில் உள்ள
வீடுகளுக்குள் கழிவு நீருடன் கலந்து தண்ணீர்
புகுந்துள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால்
பாதிக்கப்பட்ட மக்கள் தண்ணீரை வெளியேற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.