- கருணை மனு மீது குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- கொலை வழக்கு ஒன்றில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு
- மரண தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதனையடுத்து, ராதாகிருஷ்ணன் அனுப்புய கருணை மனுவை பரிசீலித்த குடியரசுத் தலைவர், ராதாகிருஷ்ணனின் மரணதண்டனையை
- ஆயுள் தண்டனையாக குறைத்து, சாகும் வரை சிறையில் இருக்க உத்தரவிட்டார். இந்நிலையில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி, ராதாகிருஷ்ணன் தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார். அந்த மனு பரிசீலிக்கப்படாத நிலையில், சென்னை
- உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், கருணை மனு மீது குடியரசுத்தலைவர் ஏற்கனவே முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்த நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.