மதுரை திருமங்கலத்தில் வீடு புகுந்து VAO அடித்தே கொலை - பெண் கைது

Update: 2025-03-15 07:39 GMT

மதுரை திருமங்கலத்தில், கிராம நிர்வாக அலுவலரை வீடு புகுந்து தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உரப்ப​​னூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த முத்துப்பாண்டி என்பவர், கொலை செய்யப்பட்ட நிலையில், மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த சமரத்பிவி மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடப்பிரச்சினை தொடர்பாக முத்துப்பாண்டியை அணுகிய சமரத் பிவி, பிரச்சினையை விரைவாக முடித்து தராததால், ஆத்திரத்தில் வீடு புகுந்து அடித்துக் கொலை செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்