ராணுவ அதிகாரியை சுற்றி வளைத்து தாக்கிய 15 போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
45 நிமிடம் கதறிய ராணுவ அதிகாரி - சுற்றி வளைத்து தாக்கிய 15 போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பஞ்சாப்பில் ராணுவ அதிகாரியையும், அவரது மகனையும், பாட்டியாலா போலீசார் ஒன்று கூடி சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ராணுவ தலைமையகத்தில் கர்னலாக பணிபுரிந்து வருபவர் புஷ்பிந்தர் பாத். இவர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், தனது மகனுடன் கடந்த 14ஆம் தேதி சென்றிருந்தபோது, காரை எடுக்கச் சொல்லி, 3 போலீசார் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர், மற்ற போலீசாரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
பேஸ்பால் பேட் உள்ளிட்டவை வைத்து, 45 நிமிடங்கள் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 3 இன்ஸ்பெக்டர்கள் 12 போலீசார் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.