டங்ஸ்டன் சுரங்க திட்டம் விவகாரம் ..! கும்மி கொட்டி போராட்டத்தில் குதித்த மதுரை மக்கள் | Madurai
மதுரை அருகே டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் கும்மியடித்தபடி மீண்டும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த கேசம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவிலான பல்லுயிர் வாழும் இடங்களை தவிர்த்து, மற்ற இடங்களில் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிடக்கோரி கிராம மக்கள் கும்மி அடித்தும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஜனவரி 7ஆம் தேதி முல்லை பெரியார் ஒருபோக பாசன சங்கம் சார்பில் கண்டன போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.