ரத்தம் சொட்ட சொட்ட கலெக்டர் ஆபீஸ்-க்கு வந்த மூவர் - காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்
#Salem
ரத்தம் சொட்ட சொட்ட கலெக்டர் ஆபீஸ்-க்கு வந்த மூவர் - காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெட்டு காயங்களுடன் மூன்று பேர் மனு அளிக்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால் நத்தம் பகுதியை சேர்ந்த சுகந்தி மற்றும் வயதான பாட்டி முத்துக்கண்ணு, சீனிவாசன் ஆகிய மூன்று பேர் வெட்டு காயங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மூன்று பேரையும், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுகந்தி கூறுகையில், எங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மரங்களை சிலர் வெட்டியதாகவும், அதனை தடுக்க முயன்றதால் எங்களை அரிவாளால் வெட்டியதாகவும் தெரிவித்தனர். வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்க வந்ததாக காயமடைந்தவர்கள் தெரிவித்ததை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.