20 வீடுகளை பதம் பார்த்த 'புல்லட்' யானை..நள்ளிரவில் நடந்தது என்ன?

Update: 2024-12-18 06:57 GMT

20 வீடுகளை பதம் பார்த்த 'புல்லட்' யானை..நள்ளிரவில் நடந்தது என்ன? - திக் திக் நிமிடங்களை பகிர்ந்த மக்கள்

வீடுகளை சேதப்படுத்திய 'புல்லட் யானையை' வெளியேற்ற தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலுரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவில் கடந்த சில நாட்களாக 'புல்லட்' என்ற யானை ஒன்று வலம்வருகிறது. இரவு நேரங்களில் கிராமப்பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாக காட்டிற்குள் விரட்டியடிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் திரும்பி வந்துள்ள அந்த 'புல்லட்' யானை, நேற்று இரவு அரசு தேயிலைத் தோட்ட குடியிருப்பிற்குள் புகுந்து 7 வீடுகளை அடித்து நொறுக்கியது. அச்சம் அடைந்துள்ள அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக யானையை வெளியேற்றக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்