மதுரை ஏர்போர்ட்-க்கு வந்த சிக்கல்...வெடிக்கும் போராட்டம்... ஒரு முடிவோடு இருக்கும் மக்கள்

Update: 2024-12-06 03:26 GMT

மதுரை ஏர்போர்ட்-க்கு வந்த சிக்கல்...வெடிக்கும் போராட்டம்... ஒரு முடிவோடு இருக்கும் மக்கள்

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக அருகில் உள்ள சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் 146 நபர்களின் வீடுகள், நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தங்களை மீள்குடி அமர்வு செய்யாமல், அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், சின்ன உடைப்பு பகுதியில் மீண்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வருகிற 19-ஆம் தேதி வரை சின்ன உடைப்பு கிராம மக்களின் வீடுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்