அடுத்த ஐபிஎல் தொடரிலும் லக்னோ அணியில் கேப்டன் கே.எல். ராகுல் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயன்கா, கடந்த ஐபிஎல் தொடரின்போது மைதானத்தில் வைத்து ராகுலை திட்டினார். இந்த சம்பவம் அப்போது, பேசுபொருளான நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில், ராகுல் லக்னோ அணியை விட்டு வெளியேறி பெங்களூரு அணியில் இணைய திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்து ராகுல் மற்றும் கோயன்கா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.