211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! மேற்கிந்திய தீவுகள் அணியை சிதறடித்த இந்திய அணி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வதோதராவில் புதிதாக கட்டப்பட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது. அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 91 ரன்கள் எடுத்து சதத்தை நழுவவிட்டார்.