மாணவர்களுடன் சேர்ந்து யோகா செய்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் | L. Murugan | Yoga
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில், சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் 14 பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், துறவிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாணவ மாணவிகளோடு சேர்ந்து யோகாசன பயிற்சியில் ஈடுபட்டார். தொடர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அமைச்சர் எல்.முருகன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.