அணைகளை கண்காணிக்க அமைச்சர் அதிரடி உத்தரவு.. | Thangam thennarasu | Thanthi TV

Update: 2024-10-14 06:47 GMT
  • குமரி மாவட்டத்தில் அணைகளை கண்காணித்து அவ்வப்போது திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, வெள்ளத்தால் ஒரு உயிர் கூட பாதிக்காத வகையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறினார். மேலும், கால்வாய் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் முடிக்க அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்