வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்கிய சசிகலா | Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சசிகலா நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த சசிகலா, பாதிக்கப்பட்ட ஜீவா நகரில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் இந்த பகுதியில் நீர் மேலாண்மை செயல்பாடு சரியாக செயல்படவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், இந்த பகுதியில் உள்ள ஏரிக் கரைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.