நட்ட நடுவே புளியமரம்... வாகனங்களே செல்ல முடியாத படி புத்தம் புது ரோடு - சுவாகாவான மக்கள் வரிப்பணம்
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையம் முதல் கொசமேடு வரை புறநகர் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடுவே பழமையான புளியமரம் ஒன்று உள்ள நிலையில், அதை அகற்றாமல் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 4 சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் உடனடியாக புளியமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.